கந்தர்வ கோட்டையில் மத்திய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டம்!!

கந்தர்வ கோட்டையில் மத்திய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-25 12:19 GMT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தினை சீர்குழிக்கும் வண்ணம் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தினை எதிர்த்து மகாத்மாவின் பெயரை நீக்கியதை கண்டித்தும் இன்று தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையிலும் குன்னாண்டார் கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர் மா சின்னதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்தப் போராட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் தோழர்களும் நிர்வாகிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Similar News