நாகுடி கடைவீதியில் சிசிடிவி கேமரா அமைப்பு; டி.எஸ்.பி சரவணன் தொடக்கிவைத்தார்!!
நாகுடி கடைவீதியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை டி.எஸ்.பி சரவணன் தொடக்கிவைத்தார்.;
By : King 24x7 Desk
Update: 2025-12-25 12:21 GMT
அறந்தாங்கியை அடுத்த நாகுடி கடைவீதியில் நாகுடி-களக்குடி வர்த்தக சங்கமும், உதவும் கரங்கள் அமைப்பு ஆகியவை இணைந்து நாகுடி பஸ் ஸ்டாண்ட் அருகிலும் வேட்டனூர் செல்லும் சாலை முக்கத்திலும் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளன. இந்த கண்கானிப்பு கேமராக்களை அறந்தாங்கி சரக காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் அவர்கள் தொடக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி தெற்கு திமுக ஒன்றிய கழகச் செயலாளர் பொன்கணேசன், நாகுடி களக்குடி வர்த்தக சங்கத் தலைவர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.