ஜேசிஐ அலுமினி கிளப் அமைப்பின் தேசிய தலைவர் நாமக்கல் வருகை!

50 வது ஆண்டை தொட இருக்கின்ற பாரம்பரியமிக்க இந்த நாமக்கல் ஜேசிஐ சார்பில் கட்டப்பட்டிருக்கும் ஜேசி பவனுக்கு வருகை புரிவது தமக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.;

Update: 2025-12-25 13:24 GMT
ஜேசிஐ பன்னாட்டு தொண்டு நிறுவனத்தின் இணை அமைப்பான ஜேசி அலுமினி கிளப் தேசிய தலைவர் அஞ்சலி குப்தா நாமக்கல்லுக்கு அலுவல் ரீதியான பயணமாக நாமக்கல் சேலம் ரோட்டில் அமைந்துள்ள நாமக்கல் ஜேசி பவனுக்கு வருகை புரிந்தார். அவருக்கு நாமக்கல் ஜேசிஐ முன்னாள் மூத்த தலைவர் விநாயகா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஜேசிஐ அலுமினி கிளப் மண்டல தலைவர் அஸ்வந்த்பாபு, உடனடி முன்னாள் தலைவர் தென்றல் நிலவன், தேசியத் தலைவர் சுற்றுப்பயண பொறுப்பாளர் அருண், மண்டல உதவி தலைவர் பாபு ரங்கராஜன், நாமக்கல் ஜேசிஐ முன்னாள் தலைவர் கல்வியாளர் பிரணவகுமார் ,ஜேசிஐ மண்டல உதவி தலைவர் கேம்பிரிட்ஜ் கார்த்தி, ஜேசிஐ அலுமினி கிளப் வட்டார செயலாளர் அக்ஷரம் கிருத்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசியத் தலைவர் அஞ்சலி குப்தா தமது உரையில்....
50 வது ஆண்டை தொட இருக்கின்ற பாரம்பரியமிக்க இந்த நாமக்கல் ஜேசிஐ சார்பில் கட்டப்பட்டிருக்கும் ஜேசிபவனுக்கு வருகை புரிவது தமக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றது என்று கூறினார்.
மேலும் இந்தியாவிலேயே மொத்தம் மூன்று இடங்களில் தான் சொந்தமாக கட்டிடம் உள்ளது என்றும் அதில் நாமக்கல் ஒன்று என்றும் பெருமையாக கூறினார்.மேலும் நாமக்கல் ஜேசிஐ இயக்கத்தின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து முன்னால் இந்நாள் நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் பாராட்டி மகிழ்வு உரை ஆற்றினார். முடிவில் நாமக்கல் ஜேசிஐ செயலாளர் தேர்வு பிரவீன் அவர்கள் நன்றி கூறினார்.

Similar News