கடவூர் அருகே தனியார் செல்போன் டவரில் கேபிள் திருடிய மூன்று பேர் கைது
பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்;
கரூர் மாவட்டம்,கடவூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் செல்போன் டவரில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 60 மீட்டர் நீளமுள்ள உயர்தர கேபிள் ஒயர்களை திருடி சென்று விட்டதாக செல்போன் டவர் கண்காணிப்பு பணியாளர் கடவூர் தாலுகா டி . இடையாபட்டியை சேர்ந்த ஏகாம்பரமூர்த்தி( 31) என்பவர் பாலவிடுதி போலீசில் புகார் அளித்துள்ளார் .இந்தப் புகாரைத் தொடர்ந்து தேனி மாவட்டம் உத்தம பாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (31 ),அதே பகுதியில் சேர்ந்த மதன் (30),திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (38 ) என மூன்று பேரையும் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்