கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது.;

Update: 2025-12-25 14:17 GMT
குமாரபாளையத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது. உலகெங்கும் டிச. 25ல் இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுவது வழக்கம். நேற்று இயேசு கிறிஸ்து பிறந்த நாளையொட்டி குமாரபாளையம் நடராஜா நகர் தேவாலயம், வேதாந்த புரம் தேவாலயம், சடையம்பாளையம் தேவாலயம், அருவங்காடு தேவாலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் நள்ளிரவு பூஜை, காலை பூஜை ஆகிய நடந்தது. கிறிஸ்தவ பெருமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர். தேவாலயங்கள் வண்ண வண்ண பூக்களாலும், தோரணங்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கபட்டிருந்தது.

Similar News