நாமக்கல்லில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அடல் பிகாரி வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு, கிழக்கு மாவட்ட பாஜக சார்பில்,நகர தலைவர் தினேஷ் தலைமையில்,கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்.;

Update: 2025-12-25 15:27 GMT
நாமக்கல்லில், முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில்,அன்னாரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.தனது வாழ்நாளின் பெரும்பான்மை காலத்தை அரசியல் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை புரிவதில் அர்ப்பணித்து வாழ்ந்த, முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.'நூற்றாண்டு நாயகருக்கு புகழ் வணக்கம்' (Atal Smiridhi) என்னும் தலைப்பில் பாஜக அவரது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறது.அதன்படி,
நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அடல் பிகாரி வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு, கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், நகர தலைவர் தினேஷ் தலைமையில், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் மாவட்ட பொருளாளர் ரவி ஆகியோர் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் தேசத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்புகள், கொள்கை, பொது நிர்வாகம், சாலைகள், பொக்ரான் அணு ஆயுத சோதனை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்கள், அதன் மூலம் நாட்டு மக்கள் அடைந்த நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தனர், அவரது வழியில் தொண்டர்கள் உழைத்து நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் பிரபு உள்ளிட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Similar News