கேரளாவைச்சேர்ந்த தம்பதியினர் கல்வி ஊக்கத்தொகை வழங்கி அமெரிக்காவிற்கு இணையாக இந்தியாவின் கடைக்கோட்டில் உள்ளவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கவே உதவிடுவதாக பேட்டி
எடப்பாடி கொங்கணாபுரம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் அமெரிக்கா நாட்டில் பணிபுரியும் கேரளாவைச்சேர்ந்த தம்பதியினர் கல்வி ஊக்கத்தொகை வழங்கி அமெரிக்காவிற்கு இணையாக இந்தியாவின் கடைக்கோட்டில் உள்ளவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கவே உதவிடுவதாக பேட்டியனித்தனர்.;
சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் ஏஜிஎன் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொடைமாட்சி அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் பணிபுரியும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த CV பிரகாஷ் & லஷ்மிபிரகாஷ் தம்பதியினர் அமெரிக்காவுக்கு நிகராக இந்தியாவிலும் கிராமங்கள் தோறும் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சிறந்த மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர் ஆசிரியர்களுக்கும் இதுவரை 345 பேருக்கு 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விருதுகள் மற்றும் நிதியுதவி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து இதுபோன்று ஆண்டுதோறும் கல்விக்காக விருதுகள் வழங்குவது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் பேட்டி அளித்தனர். அப்போது அப்பள்ளியின் நிர்வாகிகள் காசிகவுண்டன், பாக்கியம், ஆயிக்கவுண்டன், சரஸ்வதி, சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.