மோகனூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பங்கேற்பு!

மோகனூர் ஐபிசி ஆசீர்வாத திருச்சபை சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.;

Update: 2025-12-25 16:19 GMT
மோகனூர் - நாமக்கல் சாலை, சீத்தப்பட்டி பேருந்து நிறுத்தம்,ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள ஐபிசி ஆசீர்வாத திருச்சபையில் பாஸ்டர் நேசக்குமாரன் ஏற்பாட்டில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.இந்நிகழ்வில் திசா கமிட்டி உறுப்பினரும் விவசாய அணி செயலாளருமான ரவிச்சந்திரன், பொருளாளர் சசிகுமார், நாமக்கல் தெற்கு மாவட்ட தலைவர் பச்சைத்துண்டு பழனிமலை, நாமக்கல் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர், செயலாளர் குரு(எ) இளங்கோ, நாமக்கல் தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பிரேமலதா, ஒருங்கிணைந்த மோகனூர் ஒன்றிய மகளிரணி செயலாளர் சுதா, ஒன்றிய செயலாளர்கள் நவலடி, பரளி குப்புசாமி, நகர செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News