நாமக்கல் : முருகன் கோவில்களில் வளர்பிறை சஷ்டி வழிபாடு!
கிருத்திகை, சஷ்டி போன்ற முக்கிய விசேஷ நாட்களில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அவ்வகையில் மார்கழி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.;
மார்கழி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு நாமக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு,அலங்காரம்,அபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில், கூலிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவிலில் பால், தேன், இளநீர், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.