விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய நிர்வாக கூட்டம்

அம்பேத்கர் படிப்பகம் நூலக கட்டிட திறப்பு விழாவிற்கு விடுதலை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் 27ஆம் தேதி பெரம்பலூர் வருகை தர உள்ளார்;

Update: 2025-12-25 16:57 GMT
பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருகின்ற 27ஆம் தேதி வேப்பந்தட்டை ஒன்றிய பகுதியில் அன்னமங்கலம் கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் படிப்பகம்* என்ற நூலக கட்டிடத்தை திறப்பு விழாவிற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழுச்சித் தமிழரும் தொல் திருமாவளவன் அவர்கள் வருகை தர உள்ளார். ஆதலால் நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் இன்று பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறி ரத்தினவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலைப் சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாயிகள் அணியும் செயலாளர் வீர செங்கோலன், மண்டல செயலாளர் லெனின், பெரம்பலூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் மன்னர் மன்னன், பெரம்பலூர் நகர செயலாளர் தங்க சண்முகசுந்தரம், பெரம்பலூர் மகளிர் இயக்க மாநில துணை செயலாளர் செல்வாம்பாள், மகளிர் இயக்க மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பொன், பாவாணன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், பிச்சபிள்ளை, ஐயா கண்ணு, மாவட்ட அமைப்பாளர் ஐயம்பெருமாள், நகர பொறுப்பாளர்இளையராஜா, செல்ல பாண்டியன் , அம்பேத்கோகுல் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பல நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Similar News