தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்
தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்;
டிசம்பர் 25 தென்காசி மாவட்ட செய்தி துளிகள் :- 1. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 2. தென்காசி மாவட்டம் மேல பாட்டா குறிச்சி சேர்ந்த பூர்ண செல்வன் என்ற நபர் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சொந்தமான 51 சென்ட் இடத்தை பொது இடத்தில் பொது இடத்தில் கலந்து கொண்டு குத்தகை எடுத்த நிலையில் தற்போது அருகில் உள்ள நபர் இடையூறு செய்வதாக புகார் மனு அளித்துள்ளார். 3. பள்ளி அரையாண்டு விடுமுறையை தொடர்ந்து குற்றாலம் மற்றும் ஐந்தருவியல் குளிப்பதற்காக வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. 4. திருக்குற்றாலநாதர் ஆலயத்தில் இந்த ஆண்டிற்கான திருவாதிரை திருவிழா நிகழ்ச்சி காலை 5:30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. 5. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் பாஜக சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 6. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் இன்று மார்கழி மாத பத்தாவது நாள் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. 7. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபூபக்கர் என்பவரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்துள்ளார். 8. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக இசை மதிவாணன் என்பவரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். 9. அச்சன்கோவில் செல்லும் ஐயப்பன் பக்தர்கள் மற்றும் கேரள பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் செங்கோட்டை மற்றும் புளியரை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 10. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வாக்குச்சாவடி முகம் நடைபெற்று வருகிறது. 11. தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விருப்ப மனு சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் துணைத் தலைவர் சேர்ந்த செல்வம் காங்கிரஸ் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 12. தென்காசி மாவட்டத்திலிருந்து பாதயாத்திரை ஆக திருச்செந்தூர் செல்லும் பக்தர்களின் கூட்டம் துவங்கியுள்ளது. 13. புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 14. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாறாந்தை பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.