முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா.
ஆரணி பகுதியில் பல்வேறு இடங்களில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை பாஜக சார்பில் நடைபெற்றது.;
ஆரணி பகுதியில் பல்வேறு இடங்களில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை பாஜக சார்பில் நடைபெற்றது. ஆரணி நகரம். ஆரணி அண்ணாசிலை அருகில் ஆரணி நகர பாஜக சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கூட்டத்திற்கு நகரத் தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். நகர பொதுச்செயலாளர் தீனன் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் வாஜ்பாய் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பார்களாக மத்திய நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை வ.சங்கர், மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் திட்டங்களான தங்க நாற்கர சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பிரச்சார பிரிவு மாநில பொறுப்பாளர் நித்தியானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலமேலு, சிறுபான்மை மாநில செயற்குழு இடிமின்னல் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பிற அணி பிரிவு மாவட்ட தலைவர்கள் ஜெகதீசன். தாமோதரன், கோவிந்தசாமி, சரவணன், ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓபிசி பொதுச் செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார் கொளத்தூர். ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் வாஜ்பாயின் பிறந்த நாள் முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட பொதுச்செயலாளர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இதில் முன்னாள் ஓபிசி அணி மாவட்ட நிர்வாகி வேலவன் சீனிவாசன், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் திருஞான சம்பந்தன், அறிவுசார் பிரிவ மாவட்டதலைவர் எம்.பெருமாள், மண்டல பொதுச்செயலாளர்கள் எஸ்.மாதவன், கே.சுகுமாறன, ஓபிசி அணி மாவட்ட நிர்வாகி லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சேவூர். ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் நடைபெற்ற முன்னாள் பாரத பிரதமர் வாட்பாய் பிறந்த நாள் முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் வடக்கு மண்டல தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக மாவட்டபொதுச்செயலாளர் சதீஷ் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கினார். மேலும் இதில் விவசாய அணி நிர்வாகிகள் குணாநிதி, செந்தில், வழக்கறிஞர் அணி நிர்வாகி தரணிகாசிநாதன், மாவட்டசெயலாளர் சரவணன், நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.