ஆரியங்காவு சுவாமி ஐயப்பன் திருக்கோயில்
ஆரியங்காவு சுவாமி ஐயப்பன் திருக்கோயில் திருக்கல்யாண விழா;
தமிழ்நாடு, கேரளா மாநில எல்லையில் செங்கோட்டை அருகே அமைந்துள்ளது ஆரியங்காவு சுவாமி ஐயப்பன் திருக்கோயில். இங்கு கடந்த 10 நாட்களாக திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9 வது நாளான நேற்று (25-12-2025) இரவு சுவாமி ஐயப்பனுக்கும், மதுரை சௌராஷ்டிரா பெண் புஷ்கலாதேவிக்கும் பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்த விழா கோலாகலமாக நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். மேலும் நள்ளிரவில் திரைப்பட மெல்லிசை கச்சேரி நடைபெற்றது. இதில் தமிழ், மலையாள மொழி பாடல்கள் பாடப்பட்டன.