தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி
போக்குவரத்து துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.;
இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் பள்ளிகளுக்கு இடையே 69வது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருநதிட்ட வளாகத்தில் உள்ள புரட்சி தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கத்தில் இன்று துவங்கியது. தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா. சி . சிவசங்கர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இப்போட்டிகள் குழு மற்றும் தனிநபர் (லீக் மற்றும் நாட்கோட்) முறையில் நடைபெறுகிறது. போட்டியில் 31 மாநிலங்களிலிருந்து 36 அணிகளை சேர்ந்த 17வயதுக்குட்பட்ட 178 மாணவர்கள், 171 மாணவிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி கழகம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் 25 பேர் போட்டி நடுவராக பணியாற்றுகின்றனர். இப்போட்டியில் முதல் மூன்று இடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதங்கங்கள், கோப்பைகள் வழங்கப்படும். மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது . நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன் , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.