கரூரில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஏகாதின லட்ச்சார்ச்சனை ஆரம்பம்.
கரூரில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஏகாதின லட்ச்சார்ச்சனை ஆரம்பம்.;
கரூரில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஏகாதின லட்ச்சார்ச்சனை ஆரம்பம். கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாணசுபதீஸ்வரர் ஆலயம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்கம். சங்கத்தின் 39 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று ஐயப்பன் கோவில் வளாகத்தில் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஸ்ரீ அஸ்திர ஹோமம் நடைபெற்றது. இன்று இரண்டாவது நாளாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக வேள்வியில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு ஏகாதின லட்ச்சார்ச்சனை ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் முரளி சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் அர்ச்சனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கினர்.