நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் தலைமையில் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் தலைமையில் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.;
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் -2026 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 2002 வாக்காளர் பட்டியலுடன் தொடர்பு படுத்த இயலாக வாக்காளர்களுக்கு தற்போது நோட்டீஸ் (Notice) வழங்கி, கூடுதல் ஆவணங்கள் பெற்று தகுதியின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான பணியில் விசாரணை அலுவலர்களாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 20 நபர்கள் வீதம் 120 கூடுதல் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை, பேரூராட்சி துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகளிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது. எனவே, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும் வாக்குச்சாவடி மையங்களையும் ஆய்வு செய்வதோடு, தங்களது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மேலும், புதிய வாக்காளர்களை சேர்க்க அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.முன்னதாக, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மா.க.சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்களான மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், தனித் துணை ஆட்சியர் சு.சுந்தரராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் வே.சாந்தி (நாமக்கல்), .பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.