பல்லாங்குழி சாலையால் பொதுமக்கள் வாகனங்களில் செல்வதற்கு சிரமப்படுகின்றனர்

குண்டும் குழியுமான தார்ச்சாலையை சரி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை;

Update: 2025-12-26 13:35 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவில் உள்ள அழகாபுரி முதல், பஞ்சப்பட்டி நெடுஞ்சாலை வரை உள்ள தார்ச்சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இந்த சாலை வழியாக ஏராளமானோர் உப்பிடமங்கலம்,முனையனுார், கருர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர் . பல ஆண்டுகளாக, இச்சாலையில் சேதம் ஏற்பட்டுள்ளதை சரி செய்து தரக்கோரி, அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர் ஆனால் ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. எனவே சேதம் ஏற்பட்டுள்ள தார் சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News