பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கு நடைபெட்ற பிரிவு உபச்சார விழா‚
பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார்.;
தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவினைச் சிறப்பித்துவாழ்த்துரை வழங்கினார்.தொடர்ந்து பாவை நிருத்யாலயா மாணவ, மாணவிகளின் இறைவணக்கத்துடன்,மாணவ, மாணவிகளின் எதிர்காலத்திற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில், ‘பிரிவுஉபச்சார விழாவில் என் அன்பு மாணவ, மாணவிகளாகிய உங்களை காண்பதுமகிழ்ச்சியளிக்கிறது. இந்த பிரிவு உபச்சார விழாவானது உங்கள் பள்ளிக் கல்வியின் முடிவாகஇருந்தாலும், புதிய கல்லூரிக் காலத்தின் ஆரம்பமாகும். இந்தப் பருவமானது உங்களுக்குபொறுப்புகளும், கடமைகளும் ஆரம்பமாகும் பருவமாகும். நீங்கள் கற்றக் கல்வியும், அறிவும்நீங்கள் அடுத்த நிலைக்குச் செல்லும் ஆயுதமாகும். அதேபோன்று இந்த பள்ளிக் காலத்தில்நீங்கள் கற்றுக் கொண்ட கலாச்சாரம், பண்புகள், ஒழுக்கம், மதிப்புகள் போன்றவை மூங்கில்மரம் போன்று ஆழமாக வேரூன்றி உங்கள் வாழ்நாள் முழுவதும் பலன் தரக் கூடியவை. அவைஉங்கள் தொழில் முன்னேற்றப் பாதைக்கு உதவியாக அமைந்து, உங்களை முன்னேற்றத்திற்குவழிநடத்தும். புதிய பாதைக்குள் அடியெடுத்து வைக்கும் நீங்கள் உங்களுக்கென்றுஇலட்சியத்தை நிர்ணயித்து, அதனை உங்கள் மனக்கண்களில் உருவகப்படுத்திச் செயல்படுத்தவேண்டும். அந்த இலட்சியம் குறிப்பிடத்தக்கதாகவும், அடையக்கூடியதாகவும் இருக்கவேண்டும். பின்னர் இலட்சியத்தில் வெற்றியடைய தேவையான அறிவுத் தேடலை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் இலட்சியத்தில் வெற்றிப் பெற கடின மற்றும் கவனமானஉழைப்புடனும், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடனும், தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.உங்கள் செயலில் 99 சதவீதம் முயற்சித்து, ஒரு சதவீதத்தில் அஜாக்கிரதையாக விட்டுவிடக்கூடாது. எதனையும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும். இவைகளை நீங்கள்பின்பற்றினால், உங்களால் வாழ்வில் தொடர்ந்து வெற்றியடைய முடியும். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பேசினார்.பின்னர் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் முனைவர்.சி.சதீஸ், முதல்வர் ரோஹித், தலைமையாசிரியை எ.நிரஞ்சனி ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்துமாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதன் பின்னர் மாணவ, மாணவிகள் தங்களின் இனிமையான தருணங்களின்நினைவுகளையும், நன்றியுணர்வையும் வெளிப்படுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள்வழங்கப்பட்டு வழங்கப்பட்டன. நிறைவாக நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.விழாவில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.