குளித்தலை, தோகைமலை காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை
மது விற்ற இரண்டு பேர் கைது;
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா தோகைமலை மற்றும் குளித்தலை காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மதுவிற்ற நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் 45, சின்ன ரெட்டிய பட்டியைச் சேர்ந்த மலர்க்கொடி 41 ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 52 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்