நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர தொழிலாளர் கட்சி, மாநில பொதுச் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..
நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர தொழிலாளர் கட்சி, மாநில பொதுச் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..ட;
நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர தொழிலாளர் கட்சி, குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொதுச் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்: 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... புரட்சிகர தொழிலாளர்கள் கட்சி குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொது சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வரின் கவனத்தை பெறும் வகையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. புரட்சிகர தொழிலாளர்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.மாணிக்கம் தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் கே.வெங்கடாசலம், மாநில சட்ட ஆலோசகர் நல்வினை.விஸ்வராஜு, ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் பொங்கல் சிறப்பு தொகை வழங்க வேண்டும், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் உதவி தொகை 3,000 உயர்த்தி வழங்க வேண்டும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் விபத்து காப்பீட்டு தொகை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் இரண்டாவது வார்டில் உள்ள பொதுக்கலி பிரச்சினை சீரமைத்து தர வேண்டும், வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரானது பெரிய ஆறு சென்றடைய வழிவகை செய்ய வேண்டும், வெள்ளைக்கல்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளை அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், நாமகிரிப்பேட்டை இணை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுக்கா அமைக்க வேண்டும், நாமகிரிப்பேட்டையில் நிலுவையில் உள்ள பைபாஸ் ரோடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில், சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் வி. சுந்தராம்பாள், மாநில பொருளாளர் இளைஞர் அணி தலைவர் வி. பூபதி, மாநிலத் துணைத் தலைவர் சி. குப்புசாமி, மாநில பொதுச் செயலாளர் வி. சுப்பிரமணி, நாமக்கல் மாவட்ட தலைவர் பெரியசாமி, நாமக்கல் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் மல்லிகா, மகளிர் அணி ஒன்றிய தலைவர் பாஞ்சாலை, அவைத் தலைவர் செல்வராஜ், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் தேவி, வெள்ளக்கல்பட்டி செயலாளர் முருகேசன், தலைவர் குமரேசன், ஒன்றிய தலைவர் ஆசைத்தம்பி, துணைச் செயலாளர் செங்கோடன், துணைத் தலைவர் சின்ன பையன், தொகுதி அமைப்பு தலைவர் முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார், நாமக்கல் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சுந்தரம், வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் பூபதி, வெண்ணந்தூர் ஒன்றிய பொருளாளர் சண்முகம், புதுச்சத்திரம் ஒன்றிய தலைவர் பழனியப்பன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.