கொச்சி முதல் சேலம் வரையிலான பைப் லைன் அமைக்கும் பணிக்காக கட்டுப்பாட்டு அறை உருவாக்க பாறைகளை அனுமதியின்றி வெடிவைத்து தகர்த்ததால் அக்கம் பக்கத்து வீடுகளில் கல் விழுந்து பாதிப்பு
திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் ஒன்றியம் கூத்தாநத்தம் ஊராட்சியில்சேலம் மெயின் ரோடு அனுமன் கோவில் அருகே கொச்சி முதல் சேலம் வரையிலான பைப் லைன் அமைக்கும் பணிக்காக கட்டுப்பாட்டு அறை உருவாக்க பாறைகளை அனுமதியின்றி வெடிவைத்து தகர்த்ததால் அக்கம் பக்கத்து வீடுகளில் கல் விழுந்து பாதிப்பு;
கொச்சியிலிருந்து சேலம் வரை சாலை ஓரங்களில் பைப் லைன்கள் அமைக்கப்பட்டு கேஸ் கொண்டு செல்ல பணிகள் நடந்து வருகிறது இதற்கு ஆங்காங்கே கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது அதன்படி திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் ஒன்றியம் கூத்தாநத்தம் ஊராட்சி சேலம் மெயின் ரோடு அனுமன் கோவில் அருகில் கட்டுப்பாட்டு அறை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது அங்கு பாறைப்பகுதி என்பதால் பாறைகளை தகர்க்க வெடிவைத்துள்ளனர் அனுமதி இன்றி வெடி வைத்ததால் திடீரென கேட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தில் குடியிருந்த சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள்அதிர்ச்சி அடைந்துள்ளனர் அது மட்டுமல்லாது வெடி வைத்ததில் பறந்து வந்த கற்கள் தங்கள் வீட்டு மீது விழுந்ததாகவும் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அருகிலேயே பெரிய கல் ஒன்று விழுந்து நல்வாய்ப்பாக குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் இங்கு வெடிவைத்ததற்கு அனுமதி இல்லாத நிலையில் எப்படி வெடிவைத்து தகர்த்தார்கள் என தெரியவில்லை எனவும் இங்கு கட்டுப்பாட்டை அமைக்க கூடாது எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர் வெடிவைத்த தகர்த்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்தனர் புகாரை பெற்றுக் கொண்ட மல்லசமுத்திரம் காவல் நிலையத்தினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து கூத்தாநத்தம் ஊராட்சி பகுதியில் வசித்து வரும் சந்திரசேகர் மற்றும் கல் விழுந்த வீட்டில் வாழ்ந்து வரும் பொன்னம்மாள் ஆகியோர் கூறியதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருகிறோம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் தற்போது அங்கு கேஸ் குடோன் வருவதாக கூறுகிறார்கள் என்ன வருகிறது என்றே தெரியவில்லை ஆனால் ஏதோ கட்டுமான பணி நடக்கிறது அதற்காக பாறைகளை வெடிவைத்த தகர்த்துள்ளனர் அதில் சிதறிய கற்கள் எங்கள் வீட்டில் வந்து விழுந்தது ஓடுகள் உடைந்துள்ளது அதிர்ஷ்டவசமாக தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அருகில் விழுந்த கல்குழந்தை மீது விழாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தப்பித்தோம்.ஒரு நாள் கட்டுமானப்படியிலேயே இவ்வளவு பிரச்சனைகள் வரும் என்றால் கட்டுப்பாட்டு அறை இங்கு வருமானால் எவ்வளவு பாதிப்போடு நாங்கள் வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கட்டுப்பாட்டு அறையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் இங்கு அமைக்க கூடாது என வலியுறுத்துகிறோம் மேலும் இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசில் புகார் தெரிவித்துள்ளோம் என தெரிவித்தனர்