ரோட்டரி கிளப் ஆப் இராசிபுரம் எஜுகேஷன் சிட்டி
ரோட்டரி கிளப் ஆப் இராசிபுரம் எஜுகேஷன் சிட்டி;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் ரோடு சௌராஷ்டிரா சபா திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இராசிபுரம் மக்கள் நல குழுவின் தலைவர் வி.பாலு, அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். பிரேம்சஸ் அகடாமி செயலாளர் தேவேந்திரன் வரவேற்றுப் பேசினார். அகடாமியின் தலைவர் மோகன்ராஜ் நன்றி தெரிவித்தார். இராசிபுரம் மக்கள் நலக் குழுவின் செயலாளர் நல்வினை செல்வன். கௌரவத் தலைவர் ஜெயபிரகாஷ், ரோட்டரி கிளப் எஜுகேஷன் சிட்டி செயலாளர் பத்மநாபன், துணைத்தலைவர் தீபக் பொருளாளர், கரிகாலன் சௌராஷ்ட்ரா மத்திய சபை தலைவர் பாஸ்கர், செயலர் நந்தலால், பொருளாளர் அசோக்குமார் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினர். பரிசு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.இதில் விளையாட்டு வீரர்கள், பெற்றேறோர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..