கடவூரில் தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சினர்
50க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்;
கரூர்மாவட்டம்,கடவூர் தெற்கு ஒன்றியம் தூளிப்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி,தூளிப்பட்டி கிளை செயலாளர் நடராஜன்,மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் விக்னேஷ்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸோபன்சுகாஸ்,மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் செந்தில்குமார்,மாவட்ட வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார், கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.