தென்காசி மாவட்டத்தில் இன்று என்ன நடந்தது
தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்;
டிசம்பர் 26 தென்காசி மாவட்ட செய்தித் துளிகள் :- 1. தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நெகிழிப்பை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 2. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் சிறு கிழங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகைக்காக பல்வேறு காய்கறிகள் கிழங்குகள் பனங்கிழங்குகள் உள்ளிட்டவைகள் மும்மரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3. தென்காசி மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நகர தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 4. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத பஜனை கோலாலமாக நடைபெற்ற வருகிறது. 5. தென்காசி மாவட்டம் பாஜக தலைவர் ஆனந்தன் தலைமையில் வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகள் இருப்பதை குறித்த தரவுகள் நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். 6. தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுதந்திர கிசான் சங்கம் மற்றும் விவசாய அணியின் மாநில பொதுக்கூட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னாள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் கலந்து கொண்டார். 7. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலையம் அருகில் ஆபத்தான நிலையில் காவலர்கள் குடியிருப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். 8. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் கல்லூரி திருவிழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 9. கரிசல்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் டிசம்பர் 29 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 10. தென்னரசு மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 11. தென்காசி மாவட்டத்தில் இன்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 12. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் திமுக சார்பில் பிரச்சார கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.