ராமநாதபுரம் பொழுதுபோக்கு பொருட்காட்சி ஆரம்பம்
செங்கோட்டை நுழைவாயிலுடன் கூடிய தாஜ்மஹால் பொருட்காட்சி . இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் துவக்கி வைத்தார்.;
ராமநாதபுரம் கேணிக்கரை மகர் நோன்பு பொட்டல் அருகில் உள்ள நல்லம்மாள் திடலில் தமிழகத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ சாய்ராம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், செங்கோட்டை நுழைவாயிலுடன் கூடிய தாஜ்மஹால் பொருட்காட்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி ஒரு மாத காலம்வரை நடைபெறுகிறது. இதனை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார், நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன்தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஸ்ரீ சாய்ராம் என்டர்டெயின்மென்ட் நிறுவன உரிமையாளர் எம்.கே.உதயகுமார். அனைவரையும் வரவேற்றார். இதில் நகர் மன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர் ஜனாப் ஹீமாயின், ஏசியன் கிளாஸ் ஹவுஸ் உரிமையாளர் ஹமீது, என்.எஸ்.ஏ பில்டிங் மெட்டீரியல்ஸ் உரிமையாளர் நவீத், உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர். பிரமாண்டமான 120 அடி நீளத்திற்கு தத்துரூபமாக செங்கோட்டையை வடிவமைத் துள்ளனர். இதனை தொடர்ந்து உள் வளாகத்தில் பார்ப்பவர்கள் வியக்கும் வகையில் தாஜ்மஹால் வடிவமைக்கப்பட்டுள்ளது, அனைவரும் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் தனி இடத்தை ஒதுக்கி உள்ளனர். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் மகிழும் விதமாகவும், ராட்சத ராட்டினங்கள், குழந்தைகள் சறுக்கு விளையாட்டு, பேய் வீடு போன்ற நிகழ்ச்சிகளும், எண்ணற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் ஸ்டால்கள், உண்டு மகிழ உணவு கூடங்கள் உள்ளன. தினசரி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இப்பொருட்காட்சி நடைபெற உள்ளது. ராமநாதபுரத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத சூழலில் தற்போது ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் பொருட்காட்சி உருவாக்கப்பட்டு உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது