தச்சூரில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்.
ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தில் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன்;
ஆரணி தச்சூர் கிராமத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெ பேரவை சார்பில் திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பாரி பி.பாபு தலைமை தாங்கினார். 46வது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தச்சூர் கிராமத்தில் வீதி வீதியாக நடந்து சென்று டீக்கடை, காய்கறி கடை, பழ கடை, மளிகை கடை, பேருந்து நிறுத்த பயணிகள் போன்ற இடங்களில் மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் மேற்குஆரணி ஒன்றியசெயலாளர் வழக்கறிஞர் க.சங்கர் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், ஜெ பேரவை ஒன்றியசெயலாளர் புங்கம்பாடி சுரேஷ், மாவட்டமாணவரணி இணை செயலாளர் பச்சைமுத்து, நகரமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சுதாகுமார், விநாயகம், மாவட்ட பிரதிநிதி துரை, நிர்வாகிகள் மில் சரவணன், சேட்டு, சகாயம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். .