தென்காசி நகராட்சி சார்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நெகிழி சேகரிப்பு இயக்கம் சார்பில் இன்று(27-12-25) நகராட்சி சேர்மன் சாதிர், ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார அலுவலர் உத்தரவின் படி சுகாதார ஆய்வாளர்கள் ஆலோசனை படி வார்டு 33 தினசரி சந்தையில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது மற்றும் கடைகள் மற்றும் பொது மக்களுக்கு நெகிழி பற்றி விழிப்புணர்வு வழங்கி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி மேற்பார்வையாளர்கள் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.