கடையநல்லூரில் சுகாதார கேடு உருவாக்கும் பன்றிகள்
கடையநல்லூரில் சுகாதார கேடு உருவாக்கும் பன்றிகள்;
கடையநல்லூரில் உள்ள தெருவில் உலாவரும் பன் றிகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலையில், அவை திடீரென வீட்டுக்குள் புகுந்துவிடுவதால் பொதுமக் கள் அச்சமடைந்துள்ளனர். பன்றிகள் அட்டகாசம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் நீரேற்றும் நிலையம் எதிரில் மக்தும் ஜஹான் தெருப்பகுதியில் ஏராளமா னோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த தெருபகுதியில் உள்ள காலி மனைகளில் பன்றி வியாபாரிகள் சிலர் பண்ணை அமைத்து ஏராளமான பன்றிகள் வளர்த்து வருகின்றனர். இந்த பன்றிகள் இரை தேடி அவ்வப்போது குட்டிகளுடன் கூட்டமாக தெருக் களில் உலா வருகின்றன. அவை அங்குமிங்கும் ஓடி அட்டகாசம் செய்து வரு கின்றன. நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாக னங்களின் செல்பவர்களின் குறுக்கே திடீரென பாய்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. வீட்டுக்குள் புகுந்து... அதேபோல் தெருவோரத்தில் உள்ள கழிவுநீரோடை யில் உருண்டு பிரண்டு அப்படியே உலா வருவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது. கதவை திறந்து வைத்திருந்தால் கூட்டமாக வீட்டுக்குள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் பலரும் வீட்டுக்கதவுகளை எப்போதுமே பூட் டியே வைத்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் சிலர் கூறியதாவது:- மக்தும் ஜஹான் தெருவில் 100-க்கும் மேற்பட்ட பன் றிகள் குட்டிகளுடன் கூட்டமாக சுற்றி வருகின்றன. இவை, வீட்டிற்குள் புகுந்து தினமும் அட்டகாசம் செய் கின்றன. நடவடிக்கை இதனால் இப்பகுதி மக்கள் பலர் தொற்றுநோய், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகள் இந்த தெருவில் சைக்கிளில் சென்று விளையாடும்போது திடீரென தெருக்களில் ஓடும் பன்றிகள் மோதிவிடுகின்றன. இதனால் சைக்கிளில் இருந்து கீழே விழும் குழந்தைகள் காயமடைகின்றனர். எனவே நகராட்சி சுகாதார அலுவ லர்கள் இப்பகுதியில் பார்வையிட வேண்டும். மேலும் நகராட்சி சுகாதாரத்துறையினர் இதுபோல் தெருக்களில் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதோடு பன்றி வளர்ப்பு பண்ணையையும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது..