வழி தெரியாமல் நின்ற போது எனக்கு வழிகாட்டியவர் விஜய் - என் உடலில் ஓடும் ரத்தம் விஜய்க்காக தான், காங்கேயத்தில் மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே த.வெ.க, கூட்டத்திற்கு வந்திருந்த செங்கோட்டையன் வழி தெரியாமல் நின்ற போது எனக்கு வழிகாட்டியவர் விஜய் - என் உடலில் ஓடும் ரத்தம் விஜய்க்காக தான் என மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்;
காங்கேயத்தில் விஜயின் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், மேற்கு மண்டல பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட பின் செங்கோட்டையன் நிர்வாகிகளிடம் பேசுகையில், கூட்டம் என நேற்று இரவு தான் சொன்னேன், இந்த கூட்டத்தை கூட்ட அதிமுக வில் ஒரு வாரம் ஆகும், அதற்கும் என்ன என்ன மந்திரம் பண்ண வேண்டுமோ அதை பண்ணிலால் தான் முடியும், ஆனால் தளபதியை தலைமை ஏற்று தவெக ஆட்சி கட்டிலில் அமர வைக்க நீங்கள் ஆர்ப்பரித்து வருவதை கண்டு வியந்தேன். 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் 1972 புரட்சித் தலைவருடன் இணைந்து பணியாற்றினேன். புரட்சிதலைவரை கழகத்தில் இருந்து நீக்கிய போது, 3 நாட்கள் தமிழகத்தில் வாகனங்கள் ஓட வில்லை, புரட்சி தலைவர் வாழ்க எம். ஜி. ஆர் வாழ்க என எழுதினால் மட்டும் தான் கார் உள்ளிட்ட வாகனங்கள் உடையாமல் செல்லும், சரித்திரம் படைத்தார் புரட்சி தலைவர், இன்று சரித்திரம் படைத்து கொண்டுள்ள விஜயை பார்க்கிற போது நாடே வியக்கிறது. புரட்சி தலைவர் மறைவிற்கு பிறகு, புரட்சி தலைவி அம்மாவின் புனித பயணத்தை மேற்கொண்டேன். எடப்பாடி கழகத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா படம் இல்லை என்று நான் கூறியதற்கு பிறகு தான் அவர்களின் படங்களையே போட்டனர். அவர்களை மறந்தே போகி விட்டார்கள், அவர்களின் படங்களை வெறும் ஸ்டாம்ப் அளவில் போட்டார்கள், தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என இயேசு பிரான் சொன்னார், இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லமாட்டார் என சொன்னார்கள், இந்து மதத்தில் கேட்பதை கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா என்று, ஆனால் கேட்காமலே தோன்றி இருப்பவர் தான் நம் தளபதி, தமிழக வெற்றி கழகத்திற்கு வெற்றி தளபதி கிடைத்திருக்கிறார். கண் கலங்கிய KAS வழி தெரியாமல் இருந்த போது, எனக்கு வழிகாட்டியவர் விஜய் நான் இன்றைக்கு சொல்கிறேன், என் உடம்பில் ஓடுகிற ஒரு துளி ரத்தமும் விஜய்க்காக தான் என கூறி மேடையில் செங்கோட்டையன் கண் கலங்கினார். அவரை செங்கோட்டையன் வாழ்க என தொண்டர்கள் ஆவேச முழக்கமிட்டு சமாதானம் செய்தனர். புரட்சி தலைவி அம்மாவிற்கு பிறகு நான் ஒருவரை அடையாளம் காட்டினேன். அந்த அடையாளம் காட்டியவர் தான் இறுதியில் என்னை அடையாளம் காட்டி விட்டு சென்றார். கவலை பட தேவையில்லை. விஜயுடன் இணைந்த பிறகு கோவை விமான நிலையத்தில் 3. 30 மணி நேர கால தாமதம், ஆனால் நீங்கள் என்னை வரவேற்க மட்டும் இல்லாமல் தாங்கி பிடிக்கிறோம் என 5 ஆயிரம் தொண்டர்கள் பசியோடு காத்து இருந்தார்கள், இதே நிலை அன்றைக்கு முதலமைச்சராக இருந்த என்னை தூக்கி எறிந்தவர் ( EPS ) வருகிற போது, அவரை வரவேற்க ஒரு கோடி ரூபாய் செலவு செய்தோம். இன்றைக்கு ஒரு முன்னாள் அமைச்சர் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என சொல்லவில்லை என்கிறார். ஆனால் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சம்பரதாயத்திற்கு பார்த்தோமே தவிர பேச்சு வார்த்தை நடக்கவில்லை என்கின்றனர். ஆனால் அதிமுக இந்த செய்தியை பரப்பி விட்டதே பாஜக தான் என்கிறார்கள், அதிமுக - பாஜக இடையே இரு வேறு கருத்துக்கள் தவளை தண்ணில இழுக்குமாம், ஓநாய் மேட்டுக்கு இழுக்குமாம், அந்த கதையாய் உள்ளது பாஜக - அதிமுக கூட்டணி. நாடாளுமன்ற தேர்தலில் வரும் போது காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வருகிறது, மெகா கூட்டணி அமைய போகிறது என்றார் EPS ஆனால் ஒரு கூட்டணியும் வரவில்லை, அதிமுகவிற்கு 84 இடங்களில் 3ம் இடம், சில இடங்களில் டெபாசிட் போனது. இதை எல்லாம் அவரிடம் கேட்டோம், ஒரு நாள் பொய் சொல்லி ஒருவனை ஏமாற்றலாம், ஆனால் பல நாள் பொய் சொல்லி ஒருவனை ஏமாற்ற முடியாது, அதற்கு பிறகு நாமக்கல் பிரச்சார கூட்டத்திற்கு வந்த EPS, பெரிய கூட்டணி நம்மிடத்தில் வர போகிறது, கொடி அசைத்து கொண்டுள்ளார்கள் பாருங்கள் , பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள் என சொன்னார். ஆனால் பிள்ளையார் சுழி போட்டதே உங்களை முடிக்க தான், கவலை படாதீர்கள், தமிழகத்தில் விஜயை முதல்வராக ஏற்று கொண்டு யார் வேணாலும் கூட்டணிக்கு வரலாம், ஆனால் விஜயை தாண்டி யாராலும் முதலமைச்சர் என்ற கனவை கூட காண முடியாது, விஜய் இன்று மலேசியா சென்றுள்ளார். கேசட் நாளை வெளியிடப்படும், 9 என்றாலே வெற்றியின் சின்னம், அப்போது படம் வெளியாக உள்ளது, அதற்கு பிறகு யாராலும் வாயை திறக்க முடியாது, ஜனநாயகன் படத்தை எதிர்பார்த்துள்ளோம். தளபதி வருவார், தலைமை ஏற்பார், வெற்றியை சூடுவார், மக்களின் கண்ணீரை துடைப்பார் என உரையை செங்கோட்டையன் முடித்து கொண்டார்.