உதவிப் பேராசிரியர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் (வடக்கு) மாவட்ட ஆட்சியர் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-12-27 12:25 GMT
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வானது மோகனூர் சாலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மோகனூர் சாலை ஜெய்விகாஸ் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (வடக்கு) அரசு உயர்நிலை பள்ளி, நாமக்கல் (தெற்கு) அரசு மேல்நிலைப் பள்ளி, எஸ்.கரடு டிரினிட்டி அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகிய 05 தேர்வு மையங்களில் 1110 தேர்வர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1039 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 71 நபர்கள் தேர்வு எழுதவில்லை.