ஒட்டன்சத்திரம் வன சரக பகுதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம்;

Update: 2025-12-27 13:02 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனசரகத்திற்கு உட்பட்ட பாலாறு அணை, சடையன்குளம், சத்திரப்பட்டி, கருங்குளம், நல்லதங்காள் ஓடை ஆகிய பகுதிகளில் ஒட்டன்சத்திரம் வனசரக அலுவலர் ராஜா தலைமையிலான வன பணியாளர்கள், பழனி ஆண்டவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர் இதில் ஊசிவால் வாத்து, செந்நிற நாரை, மடையன், சின்னகொக்கு, நெடலைக்கொக்கு உள்ளிட்ட 43 வகையான பறவை இனங்களும், சுமார் 750 பறவைகளும் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்

Similar News