திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அறந்தாங்கி நகர திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அமைச்சர் ரகுபதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2025-12-27 16:06 GMT
தமிழ்நாடு துணைமுதல்வர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு அறந்தாங்கி நகர திமுக சார்பில் 7000 குடும்ப தலைவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் , புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ உதயம்சண்முகம், ஒன்றிய கழக செயலாளர் பொன்துரை, அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் ஆனந்த், துணைத் தலைவர் முத்து மற்றும் நகர கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறந்தாங்கி நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் செய்திருந்தார்.

Similar News