ஒரே மாதத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்கள்

காவல்துறையினர் இரவு நேரத்தில் அதிகப்படியான ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்கள் வேண்டுகோள்;

Update: 2025-12-27 17:56 GMT
ஒரே மாதத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் பெரம்பலூர், வடக்கு மாதவி சாலை தில்லை நகரில் 13 பவுன் நகை, வெளிப்பொருட்கள், வெளிநாட்டுப் பணம்; நால்ரோடு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ரூ.34 லட்சம், 44 கிராம் வெள்ளி நாணயங்கள், செல்போன்; ஆட்சியர் அலுவலகம் அருகே பீமநகரில் ஒரு வீட்டில் 34 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.1,20,500 பணம்; வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி என ஒரே மாதத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. திருடர்களுக்கு காவல்துறை மேல் எந்த பயமும் இல்லை என்று சுலபமாக வீடு வீடாக இறங்கி விட்டனர். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பெரம்பலூர் மாவட்டம் பொதுமக்கள் சீட்டை விட்டு வெளியே நாங்கள் கூட அச்சப்படுகின்றன.

Similar News