தேனி மாவட்டம் டிசம்பர் 28 சின்னமனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மார்க்கையன் கோட்டை செல்லும் சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டு இடது கால் அழுகிய நிலையில் அழுக்கு துணியுடன் துர்நாற்றம் வீசியபடி நடக்க முடியாமல் சாலையோரம் கிடந்தார் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனரும் சமூக ஆர்வலமான ரஞ்சித் குமாருக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் வி. சுந்தர் மற்றும் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ் .பாண்டியன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் முயற்சியால் காவல்துறை உதவியுடன் முதியவரை மீட்டு சுத்தம் செய்து மாற்று உடை அணிவித்தனர் .பின்னர் 108 அவசரஊர்த்தி மூலமாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விசாரணையில் அவர் திருமணமாகாதவர் என்றும் அல்லி நகரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.