கள்ளக்குறிச்சி: நாளை வாகன ஏலம்....!

கள்ளக்குறிச்சி மாவட்டம், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலம், மாவட்ட காவல்துறை அறிவிப்பு;

Update: 2025-12-28 08:32 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், 29 பைக்குகள் என மொத்தம் 33 வாகனங்கள் வரும் 29ம் தேதி காலை 10:00 மணிக்கு, மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் பைக்குகளுக்கு 1,000 ரூபாயும், நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 2 ஆயிரமும் முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். முன் வைப்புத்தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும், ஏல செலவிற்காக ஒவ்வொருவரிடமும் ரூ.100 பெறப்படும். ஏலம் விடப்படவுள்ள வாகனங்களை வரும் 29ம் தேதி காலை 8:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் நேரில் பார்வையிடலாம். ஏலம் எடுக்கும் வாகனத்திற்கான முழு தொகையுடன், கூடுதலாக 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி சேர்த்து அன்றைய தினத்திலேயே செலுத்த வேண்டும். ஏலத்தில் பங்கேற்கும் வாகன உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் விபரங்களை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலக எண் 90424 17209 மற்றும் 04151 220260 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்ட றியலாம்.

Similar News