விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு
பள்ளிபாளையத்தில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது;
தேமுதிக நிறுவன தலைவர் ,மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சியிராலும் விஜயகாந்தை நேசிப்பவர்களாலும் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர தேமுதிக சார்பில் டிவிஎஸ் மேடு பகுதியில் விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேமுதிக மாவட்ட செயலாளர் டி.எஸ்.விஜய சரவணன் வழிகாட்டுதல்படி,பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி தலைமையில், நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக தேமுதிக மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் கலந்துகொண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் திரளாக அஞ்சலி செலுத்தினர். . அஞ்சலி நிகழ்வுக்கு பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.. பள்ளிபாளையம் நகர அவை தலைவர் ஆகாஷ் குமார், துணைச் செயலாளர் சாந்தி மற்றும் நகர தேமுதிக நிர்வாகிகள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.