வெள்ளூர் வாக்குச்சாவடியில் திமுக பரப்புரை கூட்டம்

மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் வாக்குச்சாவடியில் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-28 13:49 GMT
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம் வெள்ளலூர் வாக்குச்சாவடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மணமேல்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்தி ராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சக்தி.வீரசேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வெள்ளூர் வாக்குச்சாவடியில் நடைபெற தேர்தலில் திமுகவிற்கு அதிக வாக்குகளை பெறுவது எப்படி என்பது குறித்து ஒன்றியச் செயலாளர் சக்திராமசாமி விளக்கி பேசினார். கூட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறந்தாங்கி தொகுதி ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வீரப்பன், மாலதி கணேசன், மாவட்டப்பிரதிநிதி குமரேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபுராமன், திமுக நிர்வாகிகள் சக்திஸ்ரீதரன், முத்துக்குமார், தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News