குளித்தலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வருகை
கரூர் கிழக்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு;
திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் கூட்டம் முசிறி தனியார் மண்டபத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. அதை ஒட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியிலிருந்து குளித்தலை சுங்ககேட் வழியாக வாகனம் மூலம் வந்தபோது, அங்கு காத்திருந்த கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பொன்னாடை போர்த்த ஆவலுடன் காத்திருந்தனர். இதைப் பார்த்த டிடிவி தினகரன் வாகனத்தில் இறங்கி நிர்வாகிகள் வழங்கிய பொன்னாடையை கையால் பெற்றுக் கொண்டார். அதில் ஒன்றை கிழக்கு மாவட்ட செயலாளருக்கு போர்த்திவிட்டு நன்றி தெரிவித்து வாகனம் மூலம் புறப்பட்டு சென்றார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பூபதி, தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கள்ளை வேலுச்சாமி, மணிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.