நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்!

இலவச மருத்துவ முகாமில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள், அவரது குடும்பத்தினர், பணியாளர்கள் மற்றும் நாமக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.;

Update: 2025-12-28 14:29 GMT
தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாமக்கல் - சேலம் ரோட்டில் அமைந்துள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த இலவச மருத்துவ முகாமில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள், அவரது குடும்பத்தினர், பணியாளர்கள் மற்றும் நாமக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த இலவச கண் மருத்துவ முகாமில் கண் சம்பந்தமான மருத்துவ சேவை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும் இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது. முன்னதாக
இலவச கண் பரிசோதனை முகாமை தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் முகாமை துவக்கி வைத்து சிறப்பு உரை ஆற்றி பேசினார், அவர்களுக்கு மருத்துவமனை சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
முகாமில் டாக்டர்கள் தருணிகா, ஷோபனா,கவிதா மற்றும் டாக்டர் குழுவினர்கள் கண் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.மேலும் இந்த நிகழ்வில் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜன், பொருளாளர் இளங்கோ மற்றும் நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தன், மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர். ஏற்பாடுகளை அகர்வால் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் மேலாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Similar News