சி.பி.ஐ. சார்பில் நல்லகண்ணுவின் பிறந்தநாள்விழா
குமாரபாளையம் சி.பி.ஐ. சார்பில் நல்லகண்ணுவின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது;
குமாரபாளையம் சி.பி.ஐ. சார்பில் நல்லகண்ணுவின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குமாரபாளையம் நகர சி.பி.ஐ கமிட்டி சார்பாக இந்தியாவின் ஜனநாயகம் மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சட்டம் மாநில உரிமைகள் கூட்டாட்சிக் கோட்பாட்டை பாதுகாக்க தொடர்ந்து போராடும் இயக்கம்இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு, கொடியேற்று விழா, விடுதலை போராட்ட வீரர் நல்லக்கண்ணு.101. வது பிறந்த நாள், மற்றும் மூத்த தலைவர் தங்கமணியின் . 24. வது நினைவு நாள் நிகழ்வுகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, குமாரபாளையம்நகரக்குழு அலுவலகத்தில் நகர செயலாளர் கணேஷ் குமார் தலைமையில் நடந்தது. ஒன்றிய குழு செயலர் அர்த்தனாரி கட்சி கொடியேற்றி வைத்தார். விடுதலை போராட்டத்தில் நல்லகண்ணு பட்ட கஷ்டங்கள் குறித்து மாவட்ட துணை செயலர் ரஞ்சித் பேசினார். மூத்த தலைவர் தங்கமணியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகர துணை செயலாளர் அசோகன், வழக்கறிஞர் கார்த்திகேயன், நிர்வாகிகள் ரஞ்சித், விஜய், பூபதி, சேகர், அம்சவேணி, சரசு, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.