புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது

குமாரபாளையம் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-12-28 15:32 GMT
குமாரபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. முருகேசன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இடைப்பாடி சாலை, சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில், புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார் பேக்கரி நடந்தும் கார்த்திகேயன், 41, என்பவரை கைது செய்து, புகையிலை பொருட்கள் கைப்பற்றினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News