வாக்காளர்கள் சிறப்பு முகாம்
குமாரபாளையம் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் இரு நாட்களாக நடந்தது. இந்த முகாமில் புதிய வாக்காளர் பதிவு, முகவரி மாற்றம் ஆகிய செய்து தரப்பட்டன.;
குமாரபாளையம் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் இரு நாட்களாக நடந்தது. குமாரபாளையம் தொகுதி பாகம் எண் 22,23,26,27,30,ஆகிய பாகம் எண்கள் விட்டலபுரி ஜே கே கே ரங்கம்மாள் தொடக்கப்பள்ளியில் இரண்டு நாளாக நடைபெறுகிற சிறப்பு வாக்காளர் முகாமில் நகராட்சி மேளாளர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பாக புதிய வாக்காளர் பதிவு,, முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணப்ப படிவம் பதிவு செய்து வழங்கினர். அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அனைத்து ஓட்டுச சாவடிகளில் ஆய்வு செய்தனர்,