சந்து பொங்கல் விழா கோலாகலம்
குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.;
குமாரபாளையம நகரில் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், நகரின் ஒவ்வொரு தெரு சார்பிலும் சந்து பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். இது அந்தந்த பகுதி மக்கள் ஆரோக்கியமாக வாழவும், மாணவ, மாணவியர்கள் தேர்வுகளில் வெற்றி பெறவும், தொழில் வளம் சிறக்கவும், குடும்பத்தில் திருமணம் ஆகாமல் இருக்கும் மகன் மற்றும் மகள்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும், திருட்டு மற்று விபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் இறைவனை வேண்டவும், விவசாயம் சிறக்கவும் சந்து பொங்கல் விழா கொண்டாடி வருகிறார்கள். அதுபோல் நேற்று குமாரபாளையம் கலைமகள் தெரு பொதுமக்கள் சார்பில் சந்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக காவிரியில் தீர்த்தக்க்குடங்கள் பம்பை, மேளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.