குளித்தலையில் வட்டார வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம்
குளித்தலை மணப்பாறை ரயில்வே மேம்பாலம், மருதூர் உமையாள்புரம் கதவனை அமைக்க தீர்மாணம்;
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார வளர்ச்சி ஆலோசனை கூட்டம் கிராமியம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சமூக ஆர்வலர் வக்கீல் வேதாச்சலம் தலைமை வகித்தார். காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஜெயராமன், பத்மஸ்ரீ சுப்புராமன், ஓய்வு பெற்ற செயல் அலுவலர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமியம் டாக்டர் நாராயணன் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் குளித்தலை, தோகைமலை வட்டார வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதில் தமிழக அரசு ஆணைப்படி மருதூர் - உமையாள்புரம் கதவனை திட்டத்தை தொடங்க வேண்டும். மத்திய அரசு குளித்தலை மணப்பாறை சாலை ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது அதன் பிறகு எவ்வித முகாந்தாரமும் இல்லை விரைவில் ரயில்வே மேம்பாலம் பணி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளித்தலை நகரத்தில் மேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை வைக்க வேண்டும். அடுத்து ஜனவரி மாதம் தோகைமலை பகுதியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிக அளவில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வரவழைத்து தங்கள் பகுதி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்ய வேண்டுமென தீர்மாணிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ஜெயமூர்த்தி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் கார்த்திகேயன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பயிற்சி முன்னாள் முதல்வர் கடவூர் மணிமாறன், வலையபட்டி சந்திரமோகன், வேப்பங்குடி அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.