கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் சிறுவர்பூங்கா நுழைவு கட்டணம் குறைக்க மக்கள் நீதி பேரவை கோரிக்கை...!
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட ஏமப்பேர் சிறுவர்பூங்காவில் நடை பயிற்சிமேற்கொள்ள மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது, நுழைய கட்டணம் ரூபாய் பத்து என்பது நடைப்பயிற்சி மேற்கொள்ளும்நபர்களுக்கு மிகவும் சிரமத்துக்குளாகிறார்கள் ஆகவே கட்டணத்தை குறைக்க மக்கள் நீதி பேரவைகோரிக்கை விடுத்துள்ளது;
கள்ளக்குறிச்சி நகராட்சி உட்பட்ட ஏமப்பேர் பூங்கா கட்டணம் குறைக்க மக்கள் நீதிப்பேரவை கோரிக்கை விடுத்துள்ளது,கள்ளக்குறிச்சி நகராட்சி சிறுவர் பூங்கா ஏமப்பேர் பகுதியில் அமைந்துள்ளது. இதில் பூங்கா, படகு சவாரி 5, சிறுவர் நீச்சல் குளம்-2, சிறிய மலை அருவி, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் 4 ஊஞ்சல்கள், சிறுவர்கள் விளையாடும் வகையில் சறுக்கல் ஆகியவையுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் பொழுதுபோக்கும் வகையில் படகு சவாரி மற்றும் சிறுவர் நீச்சல் குளம், ஊஞ்சல், சிறிய மலை அருவி ஆகியவையில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். இதில் நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.5, சிறுவர் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு ஒரு நபருக்கு அரை மணி நேரத்துக்கு ரூ.25, படகு சவாரியில் பயணம் செய்ய அரை மணி நேரத்துக்கு ஒரு படகில் 4 பேர் பயணம் செய்திட ரூ.100 கட்டணம் நிர்ணயம் செய்து வசூல் செய்யப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதுவாக ஆகவே கட்டணத்தை குறைக்க மக்கள் நீதிப் பேரவை கோரிக்கை