மிழலைநாடு மக்கள் கட்சியின் பெயர் - கொடி அறிமுக விழா

தருமபுரியில் நடைபெற்றது;

Update: 2025-12-29 04:14 GMT
தர்மபுரி ஜோதி மகாலில் மிழலைநாடு மக்கள் கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுக விழா நேற்று நடந்தது. மாநில தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன், மாநில பொருளாளர் பச்சமுத்து, மாநில துணைத்தலைவர் கண்ணன், துணை செயலாளர் பிரியாத்குமார், மாநில எஸ்டி அணி தலைவர் முருகேசன், தர்மபுரி மாவட்ட தலைவர் சித்தன், மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிடட பல்வேறு மாவட்டங்களிலிருந்து குருமன்ஸ் பழங்குடி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், குருமன்ஸ் ஜாதி சான்றிதழ் தமிழ்நாடு முழுவதும் கிடைக்க ஆவணம் செய்தல், மிழலை நாடு மக்கள் கட்சியின் மூலம் அனைத்து மாவட்டங்களில் உள்ள குருமன்ஸ் மக்களை ஒன்றிணைத்தல், தமிழ்நாடு முழுவதும் உள்ள குருமன்ஸ் பழங்குடி மக்களுக்ககு எஸ்டி சாதி சான்றிதழ் உடனே வழங்க வேண்டும். 2026 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நமது கோரிக்கைகளை ஏற்கும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தல், 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகள் கூட்டணியில் பெற்று தேர்தலை சந்திக்க வேண்டும். தமிழகத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குருமன்ஸ் பழங்குடி மக்கள் இருப்பதை 2026ம் ஆண்டு தேர்தலில் மிழலை நாடு மக்கள் கட்சி நிரூபிக்கும். தமிழ்நாடு அரசின் சார்பில் ஆடு வளர்ப்பு நல வாரியம் அமைத்து குருமன்ஸ் எஸ்டி மக்கள் மட்டும் நலவாரிய உறுப்பினர்களாக சேர்த்தல் வேண்டும். குருமன்ஸ் எஸ்டி இன மாணவ, மாணவிகளை தமிழக அரசின் அதிகார பதவிகளில் அமர்த்த மிழலைநாடு மக்கள் கட்சி பாடுபடும். குருமன்ஸ் இன மக்களை தொழில் துறையில் வளர்ச்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழு வளர்ச்சி பெற செய்தல் வேண்டும். பெருமிழலை குரும்ப நாயனருக்கு மணிமண்டபம் அமைத்து அரசு விழா எடுத்துக் கொண்டாட வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News