மாத சீட்டு நடத்தி பல கோடி மோசடி செய்த நபரை கைது செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை
மாதச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பணத்தை திரும்ப பெற்றுத் தரக்கூடிய நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகை.;
மாதச் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பணத்தை திரும்ப பெற்றுத் தரக்கூடிய நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகை. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண் ஒவ்வொரு மாதமும் சீட்டுகள் நடத்தி வருவதாகவும் அதன் அடிப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அவரிடம் சீட்டு பணம் செலுத்தி காலம் முடிந்த பின்னம் பணம் திரும்ப தராததால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நிலையத்தை முற்றுகையிட்டு பணத்தை திரும்பப் பெற்றுத்தர வலியுறுத்தியும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காவல் நிலையம் முன்பு திரண்டுள்ளனர். சுமார் 1000 பேரிடம் பல கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.