திருமயத்தில் ஓய்வூதியர் சங்கம் கூட்டம்.
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது;
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் கண்ணன் தலைமையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் மணிவண்ணன் துணைத் தலைவர் செந்தில்வேல் பொதுச் செயலாளர் முத்தையா முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற திட்ட இயக்குநரும் ஆதிசாய் ஐஏஎஸ் அகாடமி தலைவருமான ஏவிசிசி. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து உறுப்பினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக ஓய்வு பெற்ற இணை இயக்குநர் அழகிரிசாமி வரவேற்றார். சங்க செயலாளர் பிடிஓ கண்ணன் தீர்மானங்களை வாசித்தார். பொருளாளர் சின்னப்பா நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.ஓய்வுபெற்ற துணை வட்டார வளா்ச்சி அலுவலர் பெருமாள் நன்றி கூறினார். கூட்டத்தில் ஓய்வுபெற்ற உதவி இயக்குநர்கள் ஒன்றிய ஆணையர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் கலந்துகொண் டனர்.