பல்லடத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு வரும் பெண் தொண்டர்களுக்கு கொடுக்க சிற்றுண்டிகள்

பல்லடம் அருகே வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு!மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களுக்கு இருக்கையில் வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள்;

Update: 2025-12-29 05:31 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் திமுக மகளிர் அணி சார்பாக எம்.பி. கனிமொழி தலைமையில் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் தமிழக முதல்வர்.மு.க. ஸ்டாலின்,துணை முதல்வர்.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.தற்கான ஏற்பாடுகள் தற்போது மாநாட்டு பந்தலில் நடைபெற்று வருகிறது.மேலும் மாநாட்டிற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு மேடையின் அலங்காரங்கள் மற்றும் பதாகைகள் அமைக்கப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர்.மு.க. ஸ்டாலின் பங்கேற்று நடைபெற உள்ள இந்த மாநாட்டு பந்தலுக்கு தற்போது லாரிகள் வேன்கள் மூலமாக 10 உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் இருக்கைகளில் வைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு வரும் பெண்களுக்கு கொடுப்பதற்காக தற்போது நடைபெற்று வருகிறது,இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் அமைச்சர்கள்,சட்டமன்றத் உறுப்பினர்கள்,மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்து செய்து வருகின்றனர். வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு நடைபெறும் பல்லடம் கோவை நெடுஞ்சாலை விழா கோலமாக உள்ளது.

Similar News