இந்து மக்கள் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மாநில தொண்டர் அணி தலைவர் மோகன் தலைமையிலான இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர் அந்த மனுவில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கோவில்பட்டி, பஞ்சம்பட்டி, கலிக்கம்பட்டி வக்கம்பட்டி ஆகிய கிராமங்களில் இந்துக்கள் சிறுபான்மை சமூகமாக மாறிவிட்டார்கள். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை சமூகமாக வசிக்கிறார்கள். இந்துக்களின் கிராம கோவில் வழிபாடு, திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு கிறிஸ்தவர்கள் எதிர்க்கிறார்கள், தடை செய்கிறார்கள் மேலும் கோயில் நிலங்களையும் புது இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். எனவே இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, இந்துக்களின் வாழ்வுரிமை வழிபாட்டு உரிமையை நிலை நாட்டு வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது